குஜிலியம்பாறையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
குஜிலியம்பாறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
குஜிலியம்பாறை,
பஸ் கட்டணம் உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், குஜிலியம்பாறையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம், ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பஸ் கட்டணம் உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story