விவசாயிகள் சங்கத்தினர் தர்ணா போராட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2018 3:45 AM IST (Updated: 31 Jan 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு பயிர் கடன் உடனே வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு நிதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

சேத்துப்பட்டு,

விவசாயிகளுக்கு பயிர் கடன் உடனே வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு நிதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் சேத்துப்பட்டு அருகே பெரிய கொழப்பலூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க வட்டார செயலாளர் விஜய்குமார் தலைமை தாங்கினார். வட்டாரத்தலைவர் சிவா, துணைத்தலைவர் கே.சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எஸ்.பாஸ்கரன், மாவட்ட தலைவர் சிவராஜ், பொருளாளர் சீதாராமன் உள்பட பலர் கலந்து கொண்டு தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் ராமன் நன்றி கூறினார். 

Next Story