மோட்டார் சைக்கிள்-சரக்கு ஆட்டோ மோதல்: டிரைவர் உள்பட 3 பேர் பலி
நாகை அருகே மோட்டார் சைக்கிள்-சரக்கு ஆட்டோ மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
நாகூர்,
நாகை மாவட்டம் திருமருகலை அடுத்த அருள்மொழிதேவன் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் சக்தி(வயது 19). சரக்கு ஆட்டோ டிரைவரான இவர் நேற்று காரைக்கால் மாவட்டம் விழுதியூரில் இருந்து வேளாங்கண்ணியை நோக்கி சரக்கு ஆட்டோவில் தண்ணீர் கேன்களை ஏற்றிக்கொண்டு நாகை கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து கொண்டிருந்தார்.
நாகூரை அடுத்த தெத்தி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது எதிரே சென்ற மோட்டார் சைக்கிளும், சரக்கு ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதை தொடர்ந்து தாறுமாறாக ஓடிய சரக்கு ஆட்டோ சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார்கோட்டையை சேர்ந்த ஹரிஹரன்(22) மற்றும் அவருடன் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சரக்கு ஆட்டோ டிரைவர் சக்தி படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலச்சந்திரன், முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிரைவர் சக்தியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சக்தியும் உயிரிழந்தார்.
விபத்தில் பலியான 2 வாலிபர்களின் உடல்களையும் போலீசார் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஹரிஹரனுடன் வந்த அந்த வாலிபர் பெயர் விவரம் தெரியவில்லை.
இந்த விபத்து குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story