கள்ளக்காதலியை நிர்வாணமாக படம் பிடித்தவர் கைது வலைதளத்தில் வெளியிட்ட மனைவிக்கு வலைவீச்சு


கள்ளக்காதலியை நிர்வாணமாக படம் பிடித்தவர் கைது வலைதளத்தில் வெளியிட்ட மனைவிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 31 Jan 2018 3:00 AM IST (Updated: 31 Jan 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலியை நிர்வாணமாக செல்போனில் படம் பிடித்தவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

கள்ளக்காதலியை நிர்வாணமாக செல்போனில் படம் பிடித்தவரை போலீசார் கைது செய்தனர். அந்த காட்சிகளை வலைதளத்தில் வெளியிட்ட அவரது மனைவியை வலைவீசி தேடிவருகின்றனர்.

நிர்வாண வீடியோ

மும்பை பாந்திராவில் 40 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பெண் குளியலறையில் உடை மாற்றும்போது, நிர்வாணமாக இருக்கும் வீடியோ காட்சி மற்றும் புகைப்படங்கள் வாட்ஸ்- அப்பில் வெளியானது. இதை பார்த்து அந்த பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து பாந்திரா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், அந்த பெண் உடை மாற்றும் போது ரகசியமாக படம் பிடித்தது அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் அவரது ஆண் நண்பர் சைமன் ஜோசப்(வயது36) என்பது தெரியவந்தது.

கைது

இதையடுத்து போலீசார் சைமன் ஜோசப்பை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், சைமன் ஜோசப்புக்கும், அந்த பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. அந்த பெண் குளியலறையில் குளித்து கொண்டிருக்கும் போதும், உடை மாற்றும் போதும் பலமுறை ரகசியமாக செல்போனில் படம் பிடித்ததை சைமன் ஜோசப் ஒப்புக்கொண்டார்.

இவர்களது கள்ளக்காதல் விவகாரம் சைமன் ஜோசப்பின் மனைவிக்கு தெரியவந்தது. மேலும் அவரது செல்போனில் அந்த பெண்ணின் ஆபாச படம் இருப்பதையும் அவர் பார்த்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், அந்த பெண்ணின் வீடியோ மற்றும் புகைப்படங்களை வாட்ஸ்-அப்பில் வெளியிட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தலைமறைவான அந்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story