நோயாளியின் கணவரிடம் பணமுறைகேடு செய்த 2 டாக்டர்கள் கைது


நோயாளியின் கணவரிடம் பணமுறைகேடு செய்த 2 டாக்டர்கள் கைது
x
தினத்தந்தி 31 Jan 2018 3:15 AM IST (Updated: 31 Jan 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

சிகிச்சைக்கு வந்த நோயாளியின் கணவரிடம் பண முறைகேடு செய்த 2 டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாக்பூர்,

சிகிச்சைக்கு வந்த நோயாளியின் கணவரிடம் பண முறைகேடு செய்த 2 டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிகிச்சை

நாக்பூரை சேர்ந்தவர் சந்தீப் பாண்டே. இவரது மனைவி கடந்த சில நாட்களாக கண்களில் ஏற்பட்ட நோய் தொற்றால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து சந்தீப் பாண்டே அவரை நாக்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் வந்தனா ஐய்யர், சவானந்த் சைலேஷ் ஆகியோர் சந்தீப் பாண்டேவிடம், அவரின் மனைவிக்கு ரூ. 24 ஆயிரம் மதிப்புள்ள ஊசி மருந்தை செலுத்தவேண்டும். ஆனால் வெறும் ரூ. 3 ஆயிரம் கொடுத்தால் போதும் என தெரிவித்துள்ளனர்.

டாக்டர்கள் கைது

இதை உண்மை என்று நம்பிய சந்தீப் பாண்டே ரூ. 3 ஆயிரத்தை கொடுத்தார். பின்னர் தன் மனைவிக்கு டாக்டர்கள் செலுத்திய மருந்தை வாங்கி சோதனை செய்தபோது அதன் விலை வெறும் 150 ரூபாய் என்பது தெரியவந்தது. இதனால் தன்னை டாக்டர்கள் இருவரும் திட்டமிட்டு ஏமாற்றியதை அவர் உணர்ந்துகொண்டார். இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை அந்த மருந்தை செலுத்த வேண்டும் என்று கூறி டாக்டர்கள் அவரிடம் பணம் கெட்டுள்ளனர்.

இதுகுறித்து சந்தீப் பாண்டே லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த யோசனைப்படி சந்தீப் பாண்டே டாக்டர்களை சந்தித்து அவர்கள் கேட்ட ரூ. 3 ஆயிரத்தை கொடுத்தார். டாக்டர்கள் பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story