உல்லாஸ் நகரில் பாம்பு கடித்து பெண் தொழிலாளி சாவு கணவர் தற்கொலை முயற்சி


உல்லாஸ் நகரில் பாம்பு கடித்து பெண் தொழிலாளி சாவு கணவர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 31 Jan 2018 3:30 AM IST (Updated: 31 Jan 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

உல்லாஸ் நகரில் பாம்பு கடித்து பெண் தொழிலாளி இறந்தார். துக்கம் தாங்காமல் அவரது கணவர் தற்கொலைக்கு முயன்றார்.

அம்பர்நாத்,

உல்லாஸ் நகரில் பாம்பு கடித்து பெண் தொழிலாளி இறந்தார். துக்கம் தாங்காமல் அவரது கணவர் தற்கொலைக்கு முயன்றார்.

மனைவி சாவு

தானே மாவட்டம் உல்லாஸ்நகரில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடந்து வந்தது. இந்த பணியில் துக்காராம் வாக்(வயது45) என்பவர் தனது மனைவி காந்தாபாயுடன்(38) தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று காந்தாபாயை வேலை நடக்கும் இடத்தில் விஷப்பாம்பு ஒன்று கடித்து உள்ளது. இதில், அவர் மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த துக்காராம் வாக் மற்ற தொழிலாளர்களின் உதவியுடன் மனைவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காந்தாபாய் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சொந்த ஊரில் மனைவியின் இறுதி சடங்கை முடித்துவிட்டு, துக்காராம் வாக் கடந்த 28-ந்தேதி உல்லாஸ் நகருக்கு வந்தார்.

தற்கொலை முயற்சி

இருப்பினும் துக்காராம் வாக்குக்கு மனைவியின் இழப்பு மிகுந்த துயரத்தை கொடுத்தது. இந்த நிலையில், திடீரென அவர் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ஹில்லைன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story