வரி உயர்வுகளை மறுபரிசீலனை செய்ய சட்டமன்ற குழுக்கள் வலியுறுத்தல்
வரி உயர்வுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று சட்டமன்ற குழுக்கள் வலியுறுத்தி உள்ளன. குழு கூட்டத்தில் இருந்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. பாதியில் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுவை சட்டமன்ற பொதுக்கணக்கு குழு, மதிப்பீட்டுக்குழு ஆகிய குழுக்களின் கூட்டம் சட்டமன்ற 4-வது மாடியில் உள்ள கமிட்டி அறையில் நடந்தது. கூட்டத்துக்கு பொதுக்கணக்கு குழு தலைவர் சிவா எம்.எல்.ஏ., மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், பாஸ்கர், அசனா, என்.எஸ்.ஜே.ஜெயபால், அசோக் ஆனந்து, தனவேலு, விஜயவேணி, கீதா ஆனந்தன், எம்.என்.ஆர்.பாலன், ராமச்சந்திரன், உள்ளாட்சித்துறை செயலாளர் ஜவகர், இயக்குனர் முகமது மன்சூர், சிறப்பு அதிகாரி பிரியதர்ஷினி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சித்துறையில் வீட்டுவரி, சொத்துவரி ஆகியவை உயர்த்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் குப்பை வார வரிபோடுவதற்கும் கண்டனம் தெரிவித்தனர். உள்ளாட்சி அமைப்புகள் இல்லாதநிலையில் கவுன்சில் கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்காமல் வரிகளை உயர்த்துவது எப்படி? என்று கேள்வி எழுப்பினார்கள்.
உழவர்கரை நகராட்சி பகுதியில் 54 ஆயிரம் வீடுகளுக்கு குப்பை அள்ள வரி விதிக்கும் நிலையில் கேபிள் டி.வி. நிறுவனங்கள் சார்பில் 8 ஆயிரத்து 500 இணைப்புகளுக்கு மட்டும் கேளிக்கை வரி என்பது எப்படி? என்று கேள்வி எழுப்பினர். மேலும் புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கேளிக்கை வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். கூட்டத்தின் இறுதியில் உயர்த்தப்பட்ட வரிகளை மறுபரிசீலனை செய்ய அரசை வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே கூட்டத்தில் கலந்துகொண்ட ஆளுங்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.என்.ஆர்.பாலன் சிறிது நேரத்திலேயே கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதுகுறித்து அவர் கூறும்போது, எந்த கேள்வி கேட்டாலும் அதிகாரிகள் சட்டப்படிதான் செய்துள்ளோம் என்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டமன்ற குழுவுக்கும் அதிகாரம் கிடையாது. எனவே இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதால் எந்த பயனும் இல்லை என்று வெளியேறிவிட்டேன் என்றார்.

Related Tags :
Next Story