செனாய்நகர்- ஆலந்தூர் இடையே கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை, இன்று முதல் இயக்கப்படுகிறது
சென்னை செனாய்நகர் - ஆலந்தூர் இடையே கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது.
சென்னை,
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையை ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் செனாய்நகர் - ஆலந்தூர் இடையே அதிக பயணிகள் பயணிக்கின்றனர். இந்த வழித்தடத்தில் இதுவரை 20 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வந்தது. பயணிகளின் தேவையை கருதி பின்னர் அது 15 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் என இயக்கப்பட்டது.
தற்போது அந்த இடைவெளி நேரம் இன்னும் குறைக்கப்பட்டு கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
போக்குவரத்து நெரிசலை கருத்தில்கொண்டு பொதுமக்கள் ஏராளமானோர் மெட்ரோ ரெயிலை பயன்படுத்தி வருகின்றனர். எனவே பயணிகள் வசதிக்கேற்ப சென்னை செனாய்நகர் - ஆலந்தூர் இடையே காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் என ‘பீக் அவர்ஸ்’ நேரங்களில் மட்டும் மெட்ரோ ரெயில்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.
அந்தவகையில் மேற்கண்ட நேரங்களில் 7 நிமிடங்கள் மற்றும் 13 நிமிடங்கள் இடைவெளியில் (சுழற்சி முறையில்) அடுத்தடுத்து மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். இந்த புதிய நடைமுறை இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story