சவுதிஅரேபியாவில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் சிக்கியது, ஆந்திராவை சேர்ந்தவர் கைது
சவுதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 3 கிலோ 800 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆந்திராவைச் சேர்ந்தவரை கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள், சென்னை விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சவுதி அரேபியா ஜித்தாவில் இருந்து குவைத் வழியாக சென்னைக்கு விமானம் வந்தது.
அந்த விமானத்தில் வந்த ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த ரபி சையத்(வயது 43) என்பவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரிடம் விசாரித்தனர்.
ரபி சையத் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அவரிடம் பேரீச்சம்பழம் பெட்டிகள் 2 இருந்தன. அவற்றை பிரித்து பார்த்த போது பெட்டியில் பேரீச்சம் பழங்களுடன் தங்க கட்டிகள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
அந்த பெட்டியில் இருந்து 3 கிலோ 800 கிராம் எடைகொண்ட 39 தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 16 லட்சம் ஆகும். இதையடுத்து ரபி சையத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ஜீனத் இப்ராகிம் (36) என்பவரிடம் இருந்து ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 249 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ரெஹனா பேகம்(51) என்பவரிடம் இருந்து ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 250 கிராம் தங்க நகைகளை சுங்க இலாகா பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story