அரசு-தனியார் கட்டிடங்களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம்


அரசு-தனியார் கட்டிடங்களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம்
x
தினத்தந்தி 1 Feb 2018 7:44 AM IST (Updated: 1 Feb 2018 7:44 AM IST)
t-max-icont-min-icon

அரசு மற்றும் தனியார் கட்டிடங்களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் விழுப்புரத்தில் நடந்தது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு கட்டிட உரிமம் வழங்குதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய, மாநில, உள்ளாட்சி அரசு பொது கட்டிடங்களுக்கு கட்டிட உரிமத்தை கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும். அரசுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு கட்டிட உரிமம் பெற பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் (கட்டிடம்), உதவி இயக்குனர் (பேரூராட்சி), உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), நகராட்சி ஆணையர்கள் ஆகியோரிடம் கட்டிடங்களுக்கான வரைபடம், கட்டிட உரிமச்சான்று, தீயணைப்பு துறையின் தடையின்மை சான்று, சுகாதார சான்றுகள் ஆகியவற்றை பெற்று கட்டிட உரிமம் பெற சம்பந்தப்பட்ட சப்-கலெக்டர், வருவாய் கோட்டாட்சியரிடம் அளிக்க வேண்டும்.

மேலும் பொதுமக்கள் கூடும் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், உணவு விடுதி, மனமகிழ்மன்றம் போன்ற கட்டிடங்களுக்கும் கட்டிட உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, திருக்கோவிலூர் சப்-கலெக்டர் சாருஸ்ரீ உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story