கடலூர் முதுநகரில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கடலூர் முதுநகரில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Feb 2018 2:17 AM GMT (Updated: 1 Feb 2018 2:17 AM GMT)

கடலூர் முதுநகர் ரெயில் நிலையம் முன்பு சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் ரெயில் நிலையம் முன்பு சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2004-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் பழைய பென்சன் திட்டத்தை வழங்க வேண்டும். ராணுவத்தை போல் ரெயில்வே தொழிலாளர்களுக்கும் பென்சன் திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். உதவி தலைவர் தயாளன் முன்னிலை வகித்தார். உதவி செயலாளர் விஜயபாஸ்கர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக எஸ்.ஆர்.எம்.யு. திருச்சி கோட்ட நிர்வாக தலைவர் பழனிவேல் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் இருதயராஜ், சந்திரசேகர், ரவி உள்பட ரெயில்வே தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

Next Story