100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
திருச்சுழி யூனியன் அலுவலகத்தை 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
திருச்சுழி,
திருச்சுழி பகுதியிலுள்ள தம்மநாயக்கன்பட்டி, பரளச்சி, பிள்ளையார் தொட்டியாங்குளம், தும்முசின்னம்பட்டி உள்பட ஏராளமான கிராமங்களில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக 100 நாள் வேலைத்திட்டத்தில் பணி வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டோர் விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் செல்வராஜ், தலைவர் வீரைய்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி திருச்சுழி ஒன்றிய செயலாளர் அன்புசெல்வன் ஆகியோர் தலைமையில் திருச்சுழி யூனியன் அலுவலகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை கேட்டு மனு கொடுப்பதற்காக சென்றனர்.
அப்போது அலுவலகத்தில் இருந்த வட்டார வளர்ச்சி அதிகாரி மல்லிகா, ஒவ்வொரு தனி நபரும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிய வேண்டுமென்றால் வாரா வாரம் அந்தந்த ஊராட்சிகளில் வேலை கேட்டு மனு கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால் மட்டுமே பணி வழங்க படுமெனவும், இந்த நடைமுறை கடந்த நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் கிராம மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
புதிய நடைமுறை குறித்து முறையாக தெரியப்படுத்தாதது ஏன் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளை கண்டித்து யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதேபோல விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு மனுகொடுக்கும் போராட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்டதலைவர் சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சசிக்குமார், நகரச் செயலாளர் திருமலை பாண்டி ஆகியோர் பேசினர்.
இதேபோல வத்திராயிருப்பு ஒன்றிய அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிலட்சுமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், சின்னத்தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். 80 மனுக்கள் வழங்கப்பட்டன. பின்னர் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அவர்கள் அறிவித்திருந்த காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

Related Tags :
Next Story