இந்துக்களின் ஓட்டுக்காக ராகுல் காந்தி கோவில்களுக்கு செல்கிறாரா?
இந்துக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக ராகுல் காந்தி கோவில்களுக்கு செல்கிறாரா? என்ற கேள்விக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பதில் அளித்தார்.
பெங்களூரு,
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் வியூகங்களை அமைத்து மக்களை சந்தித்து வருகிறார்கள். அதோடு தேசிய தலைவர்களும் கர்நாடகத்துக்கு படையெடுத்து வருகிறார்கள்.
குஜராத் மாநில சட்டசபை தேர்தலின்போது பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்குள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டார். அதுபோல் கர்நாடக மாநிலத்திலும் அவர் தேர்தல் பிரசாரத்தின்போது கோவில்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா? என்று மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
“இந்திராஜி மற்றும் ராஜீவ்ஜி கர்நாடகம் வந்தபோது அடிக்கடி இங்குள்ள சிருங்கேரி கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்திராஜி கர்நாடகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்று இருக்கிறார். அதுபோல் ராகுல் காந்தியும் செல்கிறார். அதனை காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையில் மாற்றம் என்று சொல்ல முடியாது.
கர்நாடகத்திற்கு ராகுல் காந்தி வரும்போது யாராவது அவரிடம் வேண்டுகோள் வைத்தால் கோவிலுக்கு செல்வார். ஆனால் தனது பயண திட்டத்தில் கோவில்களுக்கு செல்வது குறித்து ராகுல் காந்தி எதுவும் குறிப்பிடவில்லை. குஜராத் தேர்தலின்போது ராகுல் காந்தி கோவில்களுக்கு சென்றதை இந்துக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக என்று பா.ஜனதா கூறியது. நான் கேட்கிறேன் காவிக்கட்சி என்ன ஆன்மிகத்திற்கான காப்புரிமை பெற்று இருக்கிறதா?
காங்கிரஸ் கட்சியின் முக்கிய குறிக்கோள் நவீன இந்தியாவை உருவாக்கும் ராஜீவ் காந்தியின் கனவை நனவாக்குவதற்காக உழைப்பதுதான். மாட்டு இறைச்சி, இந்து தீவிரவாதம் குறித்து பேசக்கூடாது என்று காங்கிரசாருக்கு ராகுல் காந்தி உத்தரவிட்டு இருப்பதாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. ராகுல் காந்தியை நாங்கள் சந்தித்து பேசிய கூட்டத்தில் அதுபற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் வியூகம் குறித்து மட்டுமே நாங்கள் விவாதித்தோம்.
இப்படி ஒரு பிரசாரத்தை அவிழ்த்துவிட்டு இருப்பது முழுக்க முழுக்க பா.ஜனதாவின் சதி. இது காங்கிரஸ் கட்சியை திசைதிருப்பும் முயற்சியாகும். நாங்கள் மாநிலத்தின் வளர்ச்சி, கடந்த 5 ஆண்டுகளில் எங்களின் செயல்பாடு, பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என்பதிலேயே எங்கள் முழு கவனமும் இருக்கிறது.
பா.ஜனதா இந்துத்துவா பற்றி பேசினால் நாங்கள் வளர்ச்சி பற்றி பேசுவோம். அதுதான் எங்களின் முழுமையான செயல்திட்டம். அவர்களுடைய செயல் திட்டம் மக்களை மதத்தின் அடிப்படையில் பிரிப்பது தான்.”
இவ்வாறு காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் கூறினார்.

Related Tags :
Next Story