தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்
தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என்று நாகூரில் நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாகூர்,
நாகை மாவட்டம் நாகூர் தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டம் நாகூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர கழக அவைத்தலைவர் அகமதுஹூசைன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் நாகை மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டு, நாகூர் நகரம் முழுவதும் கட்சி கொடியேற்றி, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும். அடுத்த மாதம்(மார்ச்) 24, 25-ந்தேதிகளில் ஈரோட்டில் நடைபெறும் தி.மு.க. மண்டல மாநாட்டில் நாகூர் நகரத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் இருந்தும் தி.மு.க.வினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய மக்களின் புனித பயணமான ஹஜ் பயண மானியத்தை ரத்து செய்த மத்திய அரசையும், அதற்கு துணை போன தமிழக அரசையும் வன்மையாக கண்டிப்பது. மத்திய அரசு வேலை வாய்ப்பு தேர்வை அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வேண்டும்.
இந்திய - இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடந்து கொண்டிருக்கும்போது இலங்கை அரசு தமிழக மீனவர்களை மிரட்டும் வகையில் இலங்கை எல்லைக்குள் வந்ததாக கூறி பிடிபடும் விசைப்படகுகளுக்கு, அந்த விசை படகுகளின் மதிப்பைவிட கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என்று அந்த நாட்டில் கொண்டுவரப்பட்ட சட்ட மசோதா தமிழக மீனவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே உடனே மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் பதுருநிஷா, சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அலிசாகிபு, நகர துணை அமைப்பாளர் பிரதாப், மூத்த நிர்வாகிகள் நூருல்அமீன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story