மணிமுத்தாறு அணை 4-வது ரீச்சில் இருந்து திசையன்விளை பகுதி குளங்களுக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்து விட முடிவு
மணிமுத்தாறு அணை 4-வது ரீச்சில் இருந்து திசையன்விளை பகுதி குளங்களுக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகளுடன் நடந்த சமாதான கூட்டத்தில் அதிகாரிகள் கூறினர்.
இட்டமொழி,

சமாதான கூட்டம்
மணிமுத்தாறு அணை 4-வது ரீச் 10-வது மடையில் உள்ள திசையன்விளை பகுதி பாசன குளங்களுக்கு பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி வெள்ள உபரி நீர் கால்வாய் மேம்பாட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் இட்டமொழியில் நேற்று உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்து இருந்தனர்.
இதையடுத்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நாங்குநேரி தாசில்தார் அலுவலகத்தில் நேற்று காலையில் சமாதான கூட்டம் நடந்தது. தாசில்தார் ஆதிநாராயணன் தலைமை தாங்கினார். மணிமுத்தாறு பாசன நீர்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவகுமார், உதவி செயற்பொறியாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
200 கன அடி தண்ணீர்
கூட்டத்தில், மணிமுத்தாறு அணை 3-வது மற்றும் 4-வது ரீச் பகுதிகளுக்கு தற்போது 120 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக 200 கனஅடி தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டது. உன்னங்குளம், சிலையம், ஆயர்குளம், கல்லத்தி, அரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் திறக்கும் மடையின் சாவியை சில நபர்கள் தயார் செய்து திருட்டுத்தனமாக தண்ணீர் திறந்து விடுகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் சாவியை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாசன நீரை திருட்டுத்தனமாக குழாய் மூலம் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசன நீர் செல்லும் பகுதிகளை தினமும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், உதவி செயற்பொறியாளர் உதவியுடன் கண்காணித்து போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
போராட்டம் கைவிடப்பட்டது
இதையடுத்து இட்டமொழியில் நேற்று நடக்க இருந்த உண்ணாவிரதம் போராட்டம் கைவிடப்பட்டது.
கூட்டத்தில், திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல், வடக்கு விஜயநாராயணம் வருவாய் ஆய்வாளர் சுஜாதா, மண்டல துணை தாசில்தார் பாலசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வகுமார், மகா அரிச்சந்திரன், வெள்ள உபரி நீர் கால்வாய் மேம்பாட்டு சங்க தலைவர் முத்துக்குட்டி, செயலாளர் சுதாகர் பாலாஜி, திசையன்விளை கடை வியாபாரிகள் சங்க தலைவர் டிம்பர் செல்வராஜ், திசையன்விளை நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் ஜெயராமன், கரைச்சுத்து உவரி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜன், விஜயஅச்சம்பாடு விவசாயிகள் சங்க தலைவர் முத்துக்குட்டி, திசையன்விளை பாரதீய ஜனதா கட்சி முருகையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story