பாவூர்சத்திரம் அருகே புதிய வீடு கட்டுமானத்தை நிறுத்த கலெக்டர் உத்தரவு தண்ணீர் தொட்டியில் டெங்கு கொசுப்புழு இருந்ததால் நடவடிக்கை
பாவூர்சத்திரம் அருகே, சோதனையின் போது தண்ணீர் தொட்டியில் டெங்கு கொசுப்புழு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், புதிய வீடு கட்டுமானத்தை நிறுத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
பாவூர்சத்திரம்,

கலெக்டர் ஆய்வு
நெல்லை மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து பகுதிகளிலும் அதிகாரிகள் குழுவினர் வீடுகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், தனியார் நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.
பாவூர்சத்திரத்தில் நடந்து வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது ரெயில்வே கேட் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தையும் பார்வையிட்ட கலெக்டர், மாணவர்களிடம் டெங்கு குறித்த கேள்விகளை கேட்டார். அதற்கு சரியாக பதிலளித்த மாணவர்களை பாராட்டினார்.
வீடு கட்டும் பணியை நிறுத்த உத்தரவு
பின்னர் ஆவுடையானூர், மாடியனூர் அரசு பள்ளியிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளிலும் அவர் ஆய்வு செய்தார். அப்போது, ராமர் என்பவர் புதிய வீடு கட்டுமான பணிக்காக சேமித்து வைத்திருந்த தண்ணீர் தொட்டியில் டெங்கு கொசுப்புழு இருப்பதை கண்டுபிடித்தார். அந்த நபருக்கு ரூ.500 அபராதம் விதித்ததுடன், வீடு கட்டுமான பணிகளையும் நிறுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்த ஆய்வின் போது கீழப்பாவூர் யூனியன் ஆணையாளர் ஜனார்த்தனன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராதா, மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story