பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை மாப்பிள்ளை கிடைக்காததால் பரிதாப முடிவு
அரசாங்கத்தில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை கிடைக்காததால், பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி,
திருச்சி பாலக்கரை கீழகல்லுக்கார தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகள் சிவசங்கரி(வயது 32). திருமணமாகாதவர். பட்டதாரியான இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் சிவசங்கரி நேற்று முன்தினம் இரவு வீட்டின் 2-வது மாடியில் உள்ள அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிவசங்கரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த பாலக்கரை போலீசார் சிவசங்கரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாப்பிள்ளை
இது தொடர்பாக பாலக் கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட சிவசங்கரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருமணத்திற்காக அவருடைய பெற்றோர் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அதற்கு சிவசங்கரி அந்த மாப்பிள்ளை வேண்டாம், அரசாங்கத்தில் வேலை பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அரசு வேலை பார்க்கும் மாப்பிள்ளை கிடைக்காததால் தான் சிவசங்கரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story