பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: மத்திய பட்ஜெட்டுக்கு ஜெகதீஷ் ஷெட்டர் வரவேற்பு
பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டுக்கு ஜெகதீஷ் ஷெட்டர் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டுக்கு ஜெகதீஷ் ஷெட்டர் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பொருளாதார பலமிக்க நாடாக...பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு, சரக்கு சேவை வரி அமல் ஆகிய திட்டங்களுக்கு பிறகு இந்தியா உலகின் 6–வது மிகப்பெரிய பொருளாதார பலமிக்க நாடாக மாறியுள்ளது. இதற்கு ஏற்ப நிதி மந்திரி அருண்ஜெட்லி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2–ல் இருந்து 7.5 சதவீதமாக இருக்கும் என்று அவர் கூறி இருக்கிறார்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் இலக்குடன் விவசாய சந்தை வளர்ச்சிக்கு திட்டங்கள், கிராமப்புறங்களில் சந்தைகளை அமைத்தல், விவசாய விளைபொருள் உற்பத்தி செலவு மீது 1½ மடங்கு அதிகரித்து விலையை நிர்ணயம் செய்தல், 50 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, விவசாய உற்பத்தி நிறுவனங்களுக்கு முழு வரி விலக்கு அளிப்பது போன்றவை புரட்சிகர திட்டங்கள் ஆகும்.
அதிவேக இணையதள வசதிகல்வி சீர்திருத்தத்திற்கு டிஜிட்டல் முறை, ஏழை குழந்தைகளின் கல்விக்காக ‘ஏகலவ்யா’ பள்ளிகளை நிறுவுவது, கிராம மேம்பாட்டிற்கு ரூ.14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு, 1 லட்சம் கிராமங்களுக்கு அதிவேக இணையதள வசதி செய்து கொடுப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது கிராமப்புறங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றும்.
சுகாதாரத்துறையில் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீட்டு திட்டம் அமல், 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு மருத்துவ கல்லூரி தொடங்குதல், தூய்மை பாரதம் திட்டத்தில் புதிதாக 2 கோடி கழிவறைகளை கட்டுவது போன்ற திட்டங்களால் தூய்மை இந்தியா கனவு நனவாகும்.
ரூ.17 ஆயிரம் கோடிபாதுகாப்பு துறைக்காக 2 பொருளாதார சாலைகளை அமைப்பது, ரூ.250 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கான வரியை 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பது, நிதி பற்றாக்குறையை 3.30 சதவீதமாக இருக்குமாறு செய்வது போன்றவை நல்ல திட்டங்கள் ஆகும். ரெயில்வே துறையை நவீனப்படுத்தும் வகையில் 600 ரெயில் நிலையங்களை மேம்படுத்துவது, ‘வை–பை’ வசதிகளை ஏற்படுத்துவது, கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது உள்ளிட்ட திட்டங்களை அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது ஆகும்.
கர்நாடகத்திற்கு, குறிப்பாக பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். இந்த பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடி மற்றும் நிதி மந்திரி அருண்ஜெட்லி ஆகியோருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.