ஆவடியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி


ஆவடியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 2 Feb 2018 4:15 AM IST (Updated: 2 Feb 2018 2:34 AM IST)
t-max-icont-min-icon

ஆவடியில் சாலையில் மாடுகள் அதிகளவில் நடமாடுகின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

ஆவடி, 

ஆவடி, திருமுல்லைவாயல், திருநின்றவூர், நெமிலிச்சேரி, பட்டாபிராம் ஆகிய பகுதிகளில் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலைகளிலும், அதேபோல் ஆவடி புதிய ராணுவ சாலையிலும் மாடுகள் அதிகளவில் நடமாடுகின்றன. சில நேரங்களில் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் ஓரமாக படுத்துக்கொள்கின்றன. வாகனங்களில் அதிக சத்தமாக ஒலி எழுப்பினாலும் மாடுகள் நகர மறுத்து சாலையிலேயே படுத்து கிடப்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

சாலையில் கூட்டமாக சுற்றித்திரியும் மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிடும்போதும், திடீரென சாலையின் குறுக்கே செல்லும்போதும் அந்த வழியாக செல்லும் மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதி விபத்துகள் ஏற்படுகிறது. சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும் மாடுகள் முட்டி தள்ளிவிடுகின்றன. இதனால் மாடுகள் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி காயம் அடைகிறார்கள்.

எனவே மேற்கண்ட பகுதிகளில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story