பரப்பனஅக்ரஹாரா சிறை முறைகேடு விவகாரம்: சத்திய நாராயணராவ்-ஐ.ஜி.ரூபா இடையே தொடரும் மோதல்
பரப்பனஅக்ரஹாரா சிறை முறைகேடு விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சத்திய நாராயணராவ்-ஐ.ஜி. ரூபா இடையேயான மோதல் தொடருகிறது.
பெங்களூரு,

சிறை முறைகேடு
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம்சாட்டி அரசிடம் அறிக்கை வழங்கினார். சிறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் அவர் அறிக்கையில் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அதிகாரிகள் 2 பேரும் சிறைத்துறையில் இருந்து பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும் ரூபாவின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அறிக்கையில், சிறையில் முறைகேடுகள் நடப்பதாக கூறப்பட்டு இருந்தது. ஆனால், சத்திய நாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றாரா? இல்லையா? என்பது தொடர்பான எந்த தகவலும் அறிக்கையில் இடம்பெறவில்லை. பணி இடமாற்றம் செய்யப்பட்ட சத்திய நாராயணராவ் தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். ரூபா ஐ.ஜி. அந்தஸ்தில் ஊர்க்காவல் படை கூடுதல் பொது கமாண்டோவாக பணியாற்றி வருகிறார்.
வழியனுப்பு விழா
இந்த நிலையில் கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் சமீபத்தில் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகளான பிரேம் சங்கர் மீனா, சத்திய நாராயணராவ், ககன்தீப், பி.எச்.ரானே, பி.என்.எஸ். ரெட்டி, கிருஷ்ணா பட்டா ஆகியோருக்கு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பெங்களூருவில் உள்ள தனியார் ஓட்டலில் இந்த விழா நேற்று முன்தினம் நடந்தது.
விழாவில் கலந்து கொள்ளும்படி ஐ.ஜி. ரூபா உள்பட அனைத்து ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், விழாவுக்கு முன்பாக ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ள வாட்ஸ்-அப் குழுவில் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சத்திய நாராயணராவுக்கு எதிராக, ரூபா ஒரு கருத்தை பதிவிட்டார். அந்த பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு எதிரானவர்
சத்திய நாராயணராவுக்கு வழியனுப்பு விழா நடத்துவதற்கு எதிராக நான் எனது கருத்தை பதிவு செய்கிறேன். இது எனது தனிப்பட்ட காரணத்துக்காக அல்ல. இவர் பதவியில் இருந்தபோது பிற ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணியில் தலையீடு செய்தார். டி.ஐ.ஜி. அந்தஸ்து அதிகாரிகள், டி.ஜி.பி.க்கு அறிக்கை அளிக்கும் அதிகாரம் இருந்தாலும், சிறைத்துறையில் பணியாற்றிய நாளில் முறைகேடு நடப்பதாக அறிக்கை அளித்தபோது உதவி ஐ.ஜி. மூலமாக அறிக்கை அளிக்க கூறினார். ஒருபுறம் நமது மன்றத்தில் நமக்கான உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பலவற்றை கூறுகிறோம். ஆனால் இன்னொரு புறம் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு எதிரானவருக்கு விழா எடுக்கிறோம். அப்போதைய நாட்களில் நான் பட்ட மனவேதனைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனாலும், தனிப்பட்ட காரணங்களை மனதில் வைத்துக் கொண்டு அவருக்கு எதிராக நான் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை. அவருக்கு கீழ் பணியாற்றும் எந்த ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் அவர் ஆதரவு தெரிவித்தது இல்லை’ என கூறியிருந்தார்.
இந்த பதிவை தொடர்ந்து நடந்த வழியனுப்பு விழாவில் ரூபா கலந்து கொண்டார். ஆனால், சத்திய நாராயணராவ் விழாவை புறக்கணித்தார். இந்த நிகழ்வு மற்றும் ரூபாவின் பதிவு ஆகியவை ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தொழிலுக்கு எதிரானது
இதுகுறித்து, சத்திய நாராயணராவ் கருத்து தெரிவிக்கையில், ‘அவர்(ரூபா) கொடுத்த அறிக்கைக்கு பதில் அளிப்பதற்கு முன்பாகவே அவர் தனது கற்பனை கதைகளை ஊடகங்களுக்கு முன்பு சென்று கூறினார். ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கத்தின் வாட்ஸ்-அப் குழுவில் எதிர்ப்பை தெரிவித்தது தொழிலுக்கு எதிரானது‘ என்றார்.
இந்த சம்பவத்தால் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சத்திய நாராயணராவுக்கும், ஐ.ஜி. ரூபாவுக்கும் இடையே மோதல் போக்கு தொடருவது அம்பலமாகி உள்ளது.

Related Tags :
Next Story