இடைத்தேர்தலில் வெற்றி காங்கிரசின் மறுமலர்ச்சி ராஜஸ்தானில் இருந்து தொடங்கி இருக்கிறது அசோக் சவான் பேட்டி
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
மும்பை,
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதனால், காங்கிரசின் மறுமலர்ச்சி ராஜஸ்தானில் இருந்து தொடங்கி இருக்கிறது என்று அசோக் சவான் தெரிவித்தார்.
காங்கிரஸ் வெற்றி
ராஜஸ்தான் மாநிலத்தில் 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், ஒரு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரசின் மறுமலர்ச்சி ராஸ்தானில் இருந்து தொடங்கி இருக்கிறது. நாட்டின் அரசியல் சூழல் வேகமாக மாறி வருகிறது. இது மோடி அரசின் முடிவுக்கான தொடக்கம். பாரதீய ஜனதா தலைவர்கள் அளித்த தவறான வாக்குறுதிகளால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
வாக்கு சதவீதம் உயர்வு
ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்படுவதை ராஜஸ்தான் மாநில இடைத்தேர்தல் முடிவு உணர்த்துகிறது. அங்கு காங்கிரசின் வாக்குவங்கி 30 சதவீதம் உயர்ந்திருப்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது. இந்த ஆண்டில் நடைபெறும் ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெறும். மராட்டியம் உள்பட பிற மாநிலங்களிலும், காங்கிரசுக்கு ஆதரவாக இதே அலை எதிரொலிக்கும்.
இவ்வாறு அசோக் சவான் தெரிவித்தார்.
மேலும், மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த அவர், “சாமானிய மக்களுக்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பட்ஜெட் வெறும் பகல் கனவு” என்றார்.

Related Tags :
Next Story