சுவாரசியப்படுத்தும் தங்க வேட்டை


சுவாரசியப்படுத்தும் தங்க வேட்டை
x
தினத்தந்தி 2 Feb 2018 3:54 PM IST (Updated: 2 Feb 2018 3:54 PM IST)
t-max-icont-min-icon

நியூ மெக்ஸிகோவைச் சேர்ந்தவர் பாரஸ்ட் பென். பழங்காலப் பொருட்களையும், ஓவியங்களையும் சேகரிப்பது இவருடையத் தொழில். மிகப் பெரிய கோடீஸ்வரர்.

சாகசங்களின் மீது இவருக்கு விருப்பம் அதிகம். 1988-ல் இவரது சிறுநீரகத்தில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தன்னுடைய வாழ்நாள் அதிகக் காலம் நீடிக்காது என்று நினைத்த பென், தன்னுடைய சொத்துகளை எல்லாம் விற்று தங்கமாகவும், வெள்ளியாகவும் மாற்றியிருக்கிறார். அத்துடன் தங்கத்தால் செய்யப்பட்ட பழங்காலப் பொருட்களை சேர்த்து வைத்து அதை தங்கப் புதையலாக மாற்றினார். அதை மலைப் பகுதியில் புதைத்தவர், தங்கப் புதையலை கண்டுபிடிக்கும் குறிப்புகளை ‘புதையல் வேட்டை’ என்ற புத்தகமாக எழுதி வெளியிட்டார். இதை வாங்கி படித்த இளைஞர்கள் பென்னிடம் புதையல் சம்பந்தமான குறிப்புகளை கேட்க, மனிதர் நிஜமாகவே ‘புதையல் வேட்டை’ என்ற போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்.

“கணினி உலகத்தில் இதுபோன்ற போட்டிகளை நடத்துவது, ஆச்சரியமானது. ஆனால் நான் நடத்துகிறேன். வெகுவிரைவிலேயே இறந்துவிடுவேன் என்ற விரக்தியில் தான் என்னுடைய சொத்துகளை விற்று தங்க புதையல் பெட்டகத்தை உருவாக்கினேன். ஆனால் என்னுடைய அதிர்ஷடமா? துரதிர்ஷ்டமா? என்று தெரியவில்லை. சொத்துகளை விற்று முடித்ததும், புற்றுநோய் குணமாகிவிட்டது. நான் எழுதிய புத்தகம் இளைஞர்களிடையே தேடலை அதிகப்படுத்தியதால், ஆண்டுதோறும் புதையல் வேட்டை போட்டியை நடத்துகிறேன். இதுவும் நல்ல வியாபாரம் தான். கடந்த ஆண்டு 50 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். ஆனால் ஒருவராலும் புதையலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தங்கப் புதையலின் இன்றைய மதிப்பு சுமார் 12.5 கோடி ரூபாய். புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைச் சரியாக வரிசைப்படுத்தினாலே புதையலைக் கண்டுபிடித்துவிடலாம்” என்கிறார் பென்.

Next Story