தமிழ்நாட்டில் பா.ஜ.க. தான் ஆட்சி செய்கிறது - சீமான் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் பா.ஜ.க. தான் ஆட்சி செய்கிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி பஸ் நிலையம் அருகே இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு கொடி கம்பத்தை நாம் தமிழர் கட்சி ஒன்றிய நிர்வாகிகள் நிறுவியிருந்தனர் அதனை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்து வைத்து கொடியேற்றினார். பின்னர் மாவட்ட செயலாளர் ஹக்கீம் திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- மத்திய அரசின் பட்ஜெட் குறித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று இருப்பது தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி தான் நடைபெறுகிறது என்பதை காட்டுகிறது.
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அதுவாக கவிழ்ந்துவிடுமா அல்லது கவிழ்க்கப்பட்டுவிடுமா என்பது பற்றி தெரியவில்லை. மொழிதான் முதலில் தோன்றியது. நமது நாட்டில் மொழிவாரி மாநிலமாக தான் பிரிக்கப்பட்டது. அதன் மூலம் தான் தற்போது மாநிலங்கள் உள்ளன.
ராஜஸ்தான் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி என்பது, மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. தற்போது பல பள்ளிகளில் மேற்கூரையே இல்லாமல் இருக்கும் போது, பள்ளிகளுக்கு டிஜிட்டல் போர்டு வழங்கப்படும் என்பது அரசின் மெத்தன போக்கை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றி, வடக்கு மாவட்ட செயலாளர் ஹக்கீம், மாநில கொள்கை பரப்பு செயலாளர் இ.த.சீமான் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story