மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கியஎம்.பி.ஏ. மாணவியிடம் ரூ.50 ஆயிரம் திருடிய பெண் போலீஸ் கைது + "||" + Rs.50 thousand stolen Female police Arrested

விபத்தில் சிக்கியஎம்.பி.ஏ. மாணவியிடம் ரூ.50 ஆயிரம் திருடிய பெண் போலீஸ் கைது

விபத்தில் சிக்கியஎம்.பி.ஏ. மாணவியிடம் ரூ.50 ஆயிரம் திருடிய பெண் போலீஸ் கைது
விபத்தில் சிக்கிய எம்.பி.ஏ. மாணவியிடம் ரூ.50 ஆயிரம் திருடிய பெண் போலீஸ் கைது செய்யப்பட்டார்.
புனே,

விபத்தில் சிக்கிய எம்.பி.ஏ. மாணவியிடம் ரூ.50 ஆயிரம் திருடிய பெண் போலீஸ் கைது செய்யப்பட்டார்.

எம்.பி.ஏ. மாணவி

புனே அருகே தலேகாவ் பகுதியை சேர்ந்தவர் பிரணிதா. எம்.பி.ஏ. மாணவி. இவர் கடந்த 31-ந்தேதி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள வங்கிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், இவர்களது மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் பிரணிதா உள்பட மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் காயமடைந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற தலேகாவ் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் போலீஸ் சுவாதி ஜாதவ் (வயது32) உடனே சென்று காயமடைந்த 3 பேரையும் மீட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பெண் போலீசார் கைது

இந்தநிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த பிரணிதாவுக்கு தனது கைப்பையில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதனால் பதறிப்போன அவர், சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில், பிரணிதாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய பெண் போலீஸ் சுவாதி ஜாதவ் தான் அவரின் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுவாதி ஜாதவை கைது செய்தனர். மேலும் அவரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து தெகுரோடு போலீஸ் சூப்பிரண்டு கோவிந்த் மட்குல்கர் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள பெண் போலீஸ் சுவாதி ஜாதவ் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.