மாவட்ட செய்திகள்

துரைப்பாக்கத்தில் ஆசைவார்த்தை கூறிபள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது + "||" + School student Married Young man arrested

துரைப்பாக்கத்தில் ஆசைவார்த்தை கூறிபள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது

துரைப்பாக்கத்தில் ஆசைவார்த்தை கூறிபள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது
ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை கடத்திச்சென்று திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர், 

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் எழில்நகரைச் சேர்ந்தவர் சூர்யா(வயது 24). இவர், அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் பழகியதாக தெரிகிறது. அந்த மாணவியை அடிக்கடி சந்தித்த அவர், மாணவியிடம் ஆசையாக பேசி வந்து உள்ளார்.

இந்த நிலையில் மாணவியிடம் சூர்யா ஆசை வார்த்தைகளை கூறி கடத்திச்சென்று, அவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மாணவி மீட்பு

இதுபற்றி மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் துரைப்பாக்கம் கண்ணகி நகர் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை கடத்தி சென்ற சூர்யா சென்னை பட்டினப்பாக்கத்தில் பள்ளி மாணவியுடன் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சூர்யாவை கைது செய்தனர். அவருடன் இருந்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

கைதான சூர்யா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.