ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 4 Feb 2018 2:30 AM IST (Updated: 4 Feb 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தலைவர்கள் சிலைகளுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் தலைவர்கள் சிலைகளுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தலைவர்கள் சிலைக்கு மரியாதை

தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் தலைமையில் நேற்று தூத்துக்குடியில் உள்ள தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் இணை செயலாளர் தவமணி, மாவட்ட துணை செயலாளர்கள் முகமது கனி ஞானியப்பா, ரமேஷ், இளைஞர் அணி செயலாளர் வேல்முருகன், தகவல் தொழில்நுட்ப துறை அணி செயலாளர் விஜய் ஆனந்த், வக்கீல் அணி செயலாளர் செந்தில் ஆறுமுகம், நிர்வாகி டக்லஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம்

முதலில் அவர்கள் தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக சென்று, பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர்., குரூஸ் பர்னாந்து உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.

Next Story