மீனாட்சி அம்மன் கோவில் வளாக கடைகள் அகற்றப்படுமா? அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேட்டி
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றுவது குறித்து வல்லுனர் குழு அமைக்கப்படும் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் நேற்று முன்தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கோவில் வளாகத்தில் அதிக அளவில் கடைகள் இருப்பதாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறி இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தை பார்வையிடுவதற்காக அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், உதயகுமார் ஆகியோர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றனர்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக மாவட்ட கலெக்டர், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எந்தவித சேதாரமும் இன்றி கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்து குறித்து நானும், வருவாய்த்துறை அமைச்சரும் நேரில் சென்று ஆய்வு செய்வோம்.
தீ விபத்து பற்றி மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து கோவில்களிலும் தீ விபத்து ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றுவது குறித்து வல்லுனர் குழு அமைக்கப்படும். அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் சேவூர்ராமச்சந்திரன் தலைமையில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், இந்து அறநிலையத்துறை கமிஷனர் ஜெயா ஆகியோர் நேற்று மாலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர்.
அவர்கள் மதுரை கலெக்டர் வீரராகவராவ், தக்கார் கருமுத்து கண்ணன், கோவில் கமிஷனர் நடராஜன் ஆகியோரிடம் கோவிலில் நடந்த தீ விபத்து குறித்தும், அதை தொடர்ந்து எடுத்த நடவடிக்கை, சேதம் அடைந்த பகுதிகள் பற்றியும் கேட்டறிந்தனர். தொடர்ந்து விபத்து நடந்த பகுதி முழுவதும் பார்வையிட்ட பின்பு, அமைச்சர் சேவூர்ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மீனாட்சி அம்மன் கோவில் வளாக தீவிபத்தில் சிலைகள், புராதன சின்னங்கள் எதுவும் பாதிப்பு இல்லை. வீரவசந்தராயர் மண்டபத்தின் இரண்டு பகுதியில் உள்ள மேற்கூரைகள் மட்டும் இடிந்துள்ளன.
இதனை ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்பட உள்ளது. இதில் மாவட்ட கலெக்டர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் அறங்காவலர் குழுவினர் இருப்பார்கள். அவர்கள் கோவிலின் சேத நிலவரம், பாதுகாப்பு வசதிகள், கோவிலில் கடைகள் வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து அறிக்கை தயார் செய்து தமிழக முதல்-அமைச்சருக்கு சமர்ப்பிப்பார்கள். பின்பு கடைகள் வேண்டுமா, புனரமைப்பு வேலைகள் என்னென்ன தேவை, தீப்பிடித்ததற்கான காரணம் என்ன? இனி வருங்காலத்தில் இது போன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிக்கை அளிப்பார்கள். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story