தலசயன பெருமாள் கோவிலில் தொல்லியல் துறை முன்னாள் அதிகாரிகள் ஆய்வு


தலசயன பெருமாள் கோவிலில் தொல்லியல் துறை முன்னாள் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 4 Feb 2018 4:15 AM IST (Updated: 4 Feb 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் தொல்லியல் துறை முன்னாள் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது பழமை மாறாமல் திருப்பணி நடத்த கோவில் அதிகாரிகளுக்கு அவர்கள் ஆலோசனை வழங்கினர்.

மாமல்லபுரம்,

மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவில் 108 வைணவ கோவில்களில் 63-வது இடமாக விளங்குகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது. 1998-ம் ஆண்டு இங்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெறாமல் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தொல்லியல் துறையினருடன் இயங்கும் கோவில்கள் புனரமைப்பு குழு ஆலோசனைப்படி இக்கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்க முடிவெடுக்கப்பட்டது.

இதற்காக தமிழக தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் செல்வராஜ், முன்னாள் கண்காணிப்பாளர் அர்ச்சுணன் ஆகியோர் கோவில் செயல் அலுவலர் சங்கருடன் கோவில் வளாகத்தை பார்வையிட்டு அங்குள்ள பழங்கால சிலைகள், தூண்களில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது கோவிலின் பழமை, பண்பாடு மாறாமல் திருப்பணி வேலைகளை செய்ய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தொல்லியல் துறையினர் ஆலோசனை வழங்கினர். ஆய்வின் போது கோவில் மேலாளர் சந்தானம் உடன் இருந்தார்.

Next Story