தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு தொழிலாளர் ஆய்வாளர் தகவல்
தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தூத்துக்குடி தொழிலாளர் ஆய்வாளர் (பொறுப்பு) பாலமுருகன் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
விருது
வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே அமைதியும், நல்லுறவும் நிலவுவதை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு “தொழில் நல்லுறவு பரிசு” திட்டத்தை தொடங்கி உள்ளது. 2015-16-ம் ஆண்டுக்கான சிறப்பு விருது பரிசு பெற விண்ணப்பிக்கும், தகுதியான தொழிலாளர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவினர் தேர்ந்தெடுப்பார்கள்.
இந்த விருதுக்குரிய விண்ணப்பத்தை தொழிலாளர் துறையின் www.labour.tn.gov.in/labour என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் அலுவலர் அலுவலகம், தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) அலுவலகம், வட்டார தொழிலாளர் துணை ஆணையர் அலுவலர்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர் அலுவலகங்கள் மற்றும் சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் இருந்தும் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.
கால அவகாசம் நீட்டிப்பு
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், விண்ணப்ப கட்டணம் செலுத்திய விவரத்தையும் இணைத்து சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான கடைசி நாள் 25.1.2018 என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 28-ந்தேதி வரை விண்ணப்பங்களை சென்னை தொழிலாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story