தபால் நிலையம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
பெரம்பலூர் தலைமை தபால் நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாவதை தடுக்கும் பொருட்டு அங்குள்ள கடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் கடைவீதியையும், பழைய பஸ்நிலைய பகுதியையும் இணைக்கும் வகையில் “போஸ்ட் ஆபிஸ் தெரு” உள்ளது. இங்கு பெரம்பலூர் தலைமை தபால் நிலையம் மற்றும் துணிக்கடைகள், பேன்சி கடைகள், மளிகை கடைகள், அரிசி கடைகள் உள்பட பல கடைகள் இருக்கின்றன. இதனால் எப்போதும் இப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில் கடைகளின் எல்லையை சற்று விரிவுபடுத்தி பொருட்களை சாலையோரமாக தொங்கவிட்டு சிலர் வியாபாரம் செய்வதாலும், தற்காலிகமாக சில கடைகள் சாலையில் போடப்பட்டிருப்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்கு உள்ளாவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் சாந்தா உத்தரவின் பேரில், பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஸ்ரீபிரகாஷ் தலைமையில், துப்புரவு ஆய்வாளர் பன்னீர்செல்வம், நகர அமைப்பு ஆய்வாளர் மாணிக்க செல்வன், கள உதவியாளர் மோகன் உள்பட குழுவினர் நேற்று திடீரென போஸ்ட் ஆபிஸ் தெரு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடை ஆக்கிரமிப்பின் காரணமாக சாலையில், சிலர் தங்களது இருசக்கர வாகனங்களை ஓரமாக நிறுத்த இடமில்லாமல் ஆங்காங்கே நிறுத்தி விட்டு சென்றதால் பொதுமக்கள் அந்த வழியாக நெரிசலில் சிக்கியபடி சென்றதை கண்டனர். மேலும் தபால் நிலையத்திற்கு வருபவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாவதை கண்டனர்.
இதையடுத்து நகராட்சி ஆணையர் மேற்பார்வையில், லாரி மூலம் அங்குள்ள கடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. துப்புரவு பணியாளர்கள் சாலையிலிருந்த கடையின் விளம்பர போர்டுகளை கழற்றி அகற்றினர். மேலும் கடைக்கு முன்பு போடப்பட்டிருந்த தகர சீட்டுகள் பிரித்து அப்புறப்படுத்தப்பட்டன. தார்ப் பாய் மூலம் மேற்கூரை அமைத்து செயல்பட்ட தற்காலிக கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டன. சில கடைகளின் முன்பு போடப்பட்டிருந்த சிமெண்டு சிலாப்பு கற்களை கடப்பாரை, சம்மட்டியால் அடித்து உடைத்து அப்புறப்படுத்தினர்.
ஆக்கிரமிப்பு அகற்றுவதால் ஆத்திரமடைந்த சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து, பொதுமக்கள் நலன்கருதியே இந்த நடவடிக்கை என எடுத்துக்கூறி அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஸ்ரீபிரகாஷ் கூறுகையில், மக்கள் கூட்டம் அதிகம் வரும் வீதிகளில் உள்ள கடைக்காரர்கள், பொருட்களை வெளியே வைத்து வியாபாரம் செய்வது தான் ஆக்கிரமிப்பின் முதல்படி. பின்னர் அதுவே நாளடைவில் தற்காலிக கொட்டகையாக மாறி பொதுமக்கள் நடமாட முடியாத அளவில் இடநெருக்கடியை ஏற்படுத்துகிறது. எனவே தங்களது கடையை தாண்டி சாலைக்கு வந்து வியாபாரம் செய்வதை தவிர்க்க வேண்டும். நடவடிக்கை எடுத்த பின்னரும், சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் போக்குவரத்திற்கு இடையூறாக வெங்கடேசபுரம், சங்குபேட்டை, துறையூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பதாகைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது என்று கூறினார்.

Related Tags :
Next Story