நினைவு நாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


நினைவு நாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 4 Feb 2018 4:15 AM IST (Updated: 4 Feb 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

அண்ணா நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் கோவில்களில் பொது விருந்து நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 49-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அண்ணாவின் உருவப்படம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செல்லத்துரை தலைமையிலும், நகர செயலாளர் பாஸ்கர் முன்னிலையிலும் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதைப்போல டி.டி.வி. தினகரன் அணி சார்பில் நகர செயலாளர் வீரமணி தலைமையிலும், மாவட்ட துணை செயலாளர் குணசேகரன் முன்னிலையிலும் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையிலும், நகர செயலாளர் நைனாமுகமது முன்னிலையிலும் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ம.தி.மு.க. சார்பில் கட்சியின் மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் தலைமையிலும் அக்கட்சியினர் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைப்போல திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கீரனூர் கடைவீதியில் உள்ள அண்ணாசிலைக்கு, கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. ஆறுமுகம் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் குன்றாண்டார்கோவில் ஒன்றிய செயலாளர் பால்ராஜ், கீரனூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு நகர செயலாளர் தங்கப்பன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டையில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் திருவப்பூர் முத்து மாரியம்மன் கோவிலில் அண்ணாவின் 49-வது நினைவு நாளையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொது விருந்தை தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை திருக்கோவில்கள் உதவி ஆணையர் ரமேஷ், தாசில்தார் தமிழ்மணி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதைப்போல புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவில், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில், இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் கோவில், திருநல்லூர் முத்துமாரியம்மன் கோவில், அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில், சித்தக்கூர் சேவுகப்பெருமாள் கோவில், விளானூர் பாம்பணியம்மன் கோவில், நற்பவளக்குடி மெய்யர் அய்யனார் கோவில், கீழ்காத்தி காதமறவர் கோவில், திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோவில், மணமேல்குடி அருணாச்சலேஸ்வரர் கோவில், சிலட்டுர் முத்துமாரியம்மன் கோவில், பெரம்பூர் வீரமாகாளியம்மன் கோவில், ஆலங்குடி நாடியம்மன் கோவில் உள்ளிட்ட 15 கோவில்களில் பொதுவிருந்து மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

Next Story