பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது ஏன்? மத்திய, மாநில அரசுகள் ஆய்வு செய்ய வலியுறுத்தல்
விருதுநகர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து வருவது பற்றி மத்திய, மாநில அரசுகள் ஆய்வு செய்து உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
கடந்த காலங்களில் தென் மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறந்தால் அந்த குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொன்று விடும் கொடூரம் பரவலாக இருந்து வந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இந்த நடைமுறையை தவிர்க்க தீவிர நடவடிக்கைகள் எடுத்ததன் பேரில் இந்த கொடூர நடைமுறை முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு விட்டது.
தற்போது மருத்துவ அறிவியல் வளர்ச்சி காரணமாக குழந்தை கருவில் இருக்கும் போதே அது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என கண்டறிந்து பெண் குழந்தை என்றால் கருச்சிதைவு செய்து கொள்ளும் நடைமுறை அதிகரித்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த நடைமுறையை தடுக்க மருத்துவர்கள் மற்றும் ஸ்கேன் சென்டர்கள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று சொல்வதற்கு தடை விதித்து சட்டம் இயற்றியுள்ளது. அதன்படி கருவில் இருக்கும் போதே அது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என கண்டறிந்து சொல்லும் மருத்துவர்கள் மற்றும் ஸ்கேன் மைய பொறுப்பாளர்களுக்கு தண்டனை விதிக்கவும் இச்சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்த மட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி நீண்ட காலமாகவே ஆண்களை விட பெண்களே அதிகமாக இருந்து வருகின்றனர். கடந்த 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி ஆண்கள் 8 லட்சத்து 70 ஆயிரத்து 376 பேரும், பெண்கள் 8 லட்சத்து 80 ஆயிரத்து 925 பேரும் இருந்துள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஆண்கள் 9 லட்சத்து 67 ஆயிரத்து 749 பேரும், பெண்கள் 9 லட்சத்து 74 ஆயிரத்து 579 பேர் இருந்துள்ளனர். கடந்த மாதம் 5-ந் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி ஆண்கள் 7லட்சத்து 76 ஆயிரத்து 771 பேரும், பெண்கள் 8லட்சத்து 5 ஆயிரத்து 795 பேரும் உள்ளனர். தொடர்ந்து மாவட்டத்தில் பெண்களே அதிகம் உள்ளனர்.
ஆனால் தற்போது பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் குறைந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 1000 ஆண் குழந்தைகள் பிறந்தால் 937 பெண் குழந்தைகளும், திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் 850 பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும் நிலை உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை சமீபத்தில் விருதுநகருக்கு ஆய்வுக் கூட்டத்திற்கு வந்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனும் உறுதி செய்துள்ளார். குறிப்பாக ஏழ்மை அதிகமுள்ள பின் தங்கிய பகுதியான திருச்சுழி, நரிக்குடி பகுதியில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாகவே மக்கள் தொகையில் பெண்கள் அதிகமுள்ள இந்த மாவட்டத்தில் தற்போது பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் குறைந்து வருவது ஏன் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகும். கருவுற்ற நிலையிலேயே பெண் குழந்தை என்றால் தவிர்க்கும் நிலை உள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு தவிர்க்கும் நிலை உறுதி செய்யப்பட்டால் அந்த நடைமுறைகளை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதும் அவசியம்.
எனவே மாவட்டத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் மத்திய அரசும், மாநில அரசும் சுகாதாரத்துறை மூலம் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் குறைவது குறித்து ஆய்வு மேற்கொள்வதுடன் கருவுற்ற நிலையிலேயே பெண் குழந்தை என்று கண்டறியவும் அதனை சிதைக்கவும் உதவி செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தி பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் குறைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

Related Tags :
Next Story