மாவட்டத்தில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
தர்மபுரி மாவட்டத்தில் அண்ணா நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
தர்மபுரி,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாள் நேற்று தர்மபுரி மாவட்டத்தில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தர்மபுரி பெரியார் சிலையில் இருந்து நகர செயலாளர் குருநாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று தர்மபுரி 4 ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. குப்புசாமி, முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் நகர துணை செயலாளர் பூக்கடை ரவி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பெரியண்ணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி, கூட்டுறவு பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் சின்.அருள்சாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்ட தினகரன் அணி சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தர்மபுரி பெரியார் சிலையில் இருந்து மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் தலைமையில், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர் ஆர்.ஆர்.முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று 4-ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இதில் மாவட்ட அவைத்தலைவர் முத்துசாமி, எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, மாவட்ட துணைசெயலாளர் ஏகநாதன், நகர செயலாளர் மணிவண்ணன், ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கர், பெரியசாமி, நகர பேரவை செயலாளர் பெருமாள், பேரவை மாவட்ட செயலாளர் தென்னரசு உள்பட அணியின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா நினைவுநாளையொட்டி தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று 4-ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இதில் மாவட்ட பொருளாளர் தர்மச்செல்வன், மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, நகர செயலாளர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம், முன்னாள் நகராட்சி தலைவர் சிட்டிமுருகேசன், வக்கீல் அணி நிர்வாகி ஆ.மணி, சார்பு அமைப்பு நிர்வாகிகள் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பென்னாகரம் பஸ் நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப்படத்திற்கு பி.என்.பி. இன்பசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் என்.செல்வராஜ், சி. செல்வராஜ், நகரசெயலாளர் வீரமணி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் மாரிமுத்து, காளியப்பன், மாவட்ட பிரதிநிதி சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மொரப்பூர் ஒன்றிய தினகரன் அணி சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பார்த்திபன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அண்ணாதுரை, சேட்டு, ராசு, ராமச்சந்திரன், காளியப்பன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். இதுபோல் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் நேற்று அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

Related Tags :
Next Story