மூங்கில்துறைப்பட்டு அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் போராட்டம்
மூங்கில்துறைப்பட்டு அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ளது பொருவளூர் கிராமம். இங்குள்ள காட்டுக்கொட்டாயில் டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்ததாக தெரிகிறது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும், டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு, நேற்று மதியம் திறக்கப்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்த கிராம மக்கள் நேற்று மதியம் கடை முன்பு திரண்டனர். தொடர்ந்து அவர்கள் இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த மூங்கில் துறைப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இங்கு மதுகுடிக்க வருபவர்கள் போதை தலைக்கேறியதும், தகராறில் ஈடுபடுவார்கள். மேலும், கல்லூரி மாணவிகள், பெண்களை கேலி செய்வதால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்று தெரிவித்தனர். பின்னர் போலீசார் கூறுகையில், கடையை நிரந்தரமாக மூடுவது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும், அதுவரை தற்காலிகமாக இந்த கடை செயல்படாது என்று கூறினர்.
இதையேற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து கடை ஊழியர்கள், மதுபாட்டில்களை கடைக்குள்ளே வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story