புழுங்கல் அரிசி வழங்கக்கோரி ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை


புழுங்கல் அரிசி வழங்கக்கோரி ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 4 Feb 2018 3:45 AM IST (Updated: 4 Feb 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

வாய்மேடு அருகே புழுங்கல் அரிசி வழங்கக்கோரி ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாய்மேடு,

வாய்மேட்டை அடுத்த மருதூர் தெற்கில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்தநிலையில் இந்த ரேஷன் கடையில் கடந்த 3 மாதங்களாக குடும்ப அட்டைக்கு பச்சரிசி மட்டும் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. புழுங்கல் அரிசி வழங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இந்தநிலையில் தொடர்ந்து பச்சரிசி மட்டுமே வழங்கப்படுவதால், நேற்று குடும்ப அட்டைதாரர்கள் புழுங்கல் அரிசி வழங்கக்கோரி திடீரென ரேஷன் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ரேஷன் கடை ஊழியர்கள் அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பொதுமக்கள் முற்றுகையிட்டது குறித்து தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நாளை (திங்கட்கிழமை) முதல் 10 கிலோ பச்சரிசியும், 10 கிலோ புழுங்கல் அரிசியும் வழங்கப்படும் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story