தஞ்சையில், நினைவு நாளையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு
தஞ்சையில் அண்ணாவின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க., டி.டி.வி.தினகரன் அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தஞ்சாவூர்,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக தஞ்சை சிவகங்கை பூங்கா அருகில் இருந்து கு.பரசுராமன் எம்.பி. தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் துரை.திருஞானம், மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பிரமணியன், மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் அமுதாரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக அண்ணா சிலைக்கு வந்தனர்.
இதையடுத்து அண்ணா சிலைக்கு நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், சாமிவேலு, இளங்கோவன், காவேரி சிறப்பு அங்காடி தலைவர் பண்டரிநாதன், திராவிட வங்கி தலைவர் பஞ்சு மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், மாணவரணி, மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தஞ்சை கீழவாசலில் உள்ள காமராஜர் சிலை அருகில் இருந்து தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா, நகர செயலாளர் நீலமேகம், தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு வந்தனர். பின்னர் தி.மு.க. நிர்வாகிகள் பலர், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் ஒன்றிய செயலாளர் அருளானந்தசாமி, மாநில மகளிரணி துணை செயலாளர் காரல்மார்க்ஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் சண்.ராமநாதன், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் அஞ்சுகம்பூபதி, பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், சட்ட திட்டக்குழு உறுப்பினர் இறைவன், மாநகராட்சி முன்னாள் உறுப்பினர் மேத்தா மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், இளைஞரணி, மகளிரணி, மாணவரணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் அமர்சிங், பொதுச் செயலாளர் ஜெயக்குமார், நகர செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தஞ்சை கீழவாசலில் உள்ள காமராஜர் சிலை அருகில் இருந்து டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தலைமையில் மாநில பொருளாளர் ரெங்கசாமி, கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், தெற்கு மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலையில் டி.டி.வி.தினகரன் அணியினர் ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு வந்தனர். பின்னர் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில விவசாயஅணி தலைவர் துரை.கோவிந்தராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஆசைதம்பி, ராஜேஷ்கண்ணன், செந்தில்வேலன், குலோத்துங்கன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ராஜேஸ்வரன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ், வட்ட செயலாளர் அய்யாவு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சை காந்திசாலையில் உள்ள ராஜப்பா பூங்கா அருகில் இருந்து மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் உதயகுமார் தலைமையில் மாவட்ட பொருளாளர் துரைசிங்கம், நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் ம.தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு அண்ணா சிலைக்கு வந்தனர். பின்னர் நிர்வாகிகள் சிலர், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் மாநில மகளிரணி செயலாளர் டாக்டர் ரொஹையா, மாநில தேர்தல் பணி துணைச் செயலாளர் விடுதலைவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் தமிழ்வாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஹாஜாநஜிமுதீன், நகர துணைச் செயலாளர் குணசேகரன், ஒன்றிய செயலாளர் பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story