சத்தீஷ்கரில் இருந்து சரக்கு ரெயிலில் 3,200 டன் புழுங்கல் அரிசி தஞ்சைக்கு வந்தது


சத்தீஷ்கரில் இருந்து சரக்கு ரெயிலில் 3,200 டன் புழுங்கல் அரிசி தஞ்சைக்கு வந்தது
x
தினத்தந்தி 4 Feb 2018 3:45 AM IST (Updated: 4 Feb 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

சத்தீஷ்கரில் இருந்து சரக்கு ரெயிலில் 3,200 டன் புழுங்கல் அரிசி தஞ்சைக்கு வந்தது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் புழுங்கல்அரிசி, பச்சரிசி, கோதுமை போன்றவை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய தொகுப்பில் இருந்து புழுங்கல்அரிசி போன்றவை தமிழகத்திற்கு கொண்டு வரப்படும். அதன்படி சத்தீஷ்கர் மாநிலத்தில் இருந்து சரக்குரெயிலில் 53 வேகன்களில் 3,200 டன் புழுங்கல்அரிசி தஞ்சை ரெயில் நிலையத்திற்கு வந்தது.

இந்த அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றி தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன.

இந்த புழுங்கல்அரிசி மூட்டைகள் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு லாரிகளில் எடுத்து செல்லப்பட்டு பொது வினியோக திட்டத்தின் மூலம் வினியோகிக்கப்பட உள்ளன. 

Next Story