ஈரோட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டம்


ஈரோட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 4 Feb 2018 3:15 AM IST (Updated: 4 Feb 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 30–ந் தேதி முதல் தர்ணா போராட்டம் நடந்து வந்தது.

ஈரோடு,

2–வது ஊதியக்குழுவில் விடுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும். ஓய்வு பெறும் வயதை 60–ல் இருந்து 58 ஆக குறைக்க கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் கடந்த 30–ந் தேதி முதல் தர்ணா போராட்டம் நடந்து வந்தது.

5 நாட்கள் நடைபெற்ற இந்த போராட்டம் நேற்று முடிவடைந்தது. இந்த போராட்டத்துக்கு அனைத்து தொழில் சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பாளர் எல்.பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். தொழில் சங்க நிர்வாகிகள் சண்முகம், ராஜமாணிக்கம், மணியன், புன்னியகோடி, ரவி, சதாசிவம், தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், பி.எஸ்.என்.எல். தொழிலாளர் சங்க கிளைத்தலைவர் அய்யாவு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஊழியர் மற்றும் நிர்வாகிகள் சங்கம், அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள்.


Next Story