வரும் முன் காப்போம்!


வரும் முன் காப்போம்!
x
தினத்தந்தி 4 Feb 2018 11:15 AM IST (Updated: 4 Feb 2018 11:01 AM IST)
t-max-icont-min-icon

இளைஞர்கள் சிகரெட், பீடி மற்றும் புகையிலை பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால், நாளுக்கு நாள் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நிலத்தில் விளைச்சல் அதிகரிப்பதற்காக போடப் படும் உரங்கள், பூச்சி மருந்துகள், ரசாயனப் பொருட்கள் போன்றவை மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகளை சாப்பிடுவது, தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது, இனிப்பு, சாக்லேட் அதிகம் சாப்பிடுவது போன்றவற்றால் இந்நோய் அதிகம் ஏற்படுகிறது. கோபம், பயம், ஆசை போன்ற காரணங்களினாலும் நரம்புத் தளர்ச்சியை ஏற்படுத்தி அதன் வழியாகவும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். மேலும், வாழ்க்கை முறை மாற்றத்தாலும், உணவு பழக்கவழக்கத்தாலும் இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். 40 சதவீதம் பேருக்கு புகையிலை பொருட்களால் தான் புற்றுநோய் வருகிறது. தொடக்க காலங்களில் இந்நோயை கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது. தற்போது குழந்தைகளுக்கு வரும் புற்றுநோயில் 65 சதவீதம் குணப்படுத்த முடிகிறது. சராசரியாக ஒரு நோயாளிக்கு நோயை குணப்படுத்த ரூ.3 லட்சம் வரை செலவாகிறது.

மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோயை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆரம்பநிலையில் கண்டறிதலே பூரண குணமடைவதற்கு வழியாகும். நல்ல உணவுப் பழக்கத்தால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். புற்றுநோய் உள்ளவர்கள் குணமடைவதற்கு மருந்து மாத்திரைகள் மட்டுமல்லாமல், நல்ல ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவும் மிகவும் அவசியமானதாகும். குறிப்பாக பூண்டு, முட்டைக்கோஸ், காலிபிளவர், முருங்கைக் கீரை, திராட்சை, இஞ்சி, மஞ்சள் தூள், ஆரஞ்சு, எலுமிச்சை சாறு, மாதுளை, மிளகாய், கீரை வகைகள், தக்காளி போன்றவற்றை உணவில் அதிகம் எடுத்துக் கொள்வதுடன், இளநீர் அதிகம் பருகினால் புற்றுநோய் தாக்காமல் இருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு வேளை உபவாசம் இருத்தல், புகைப்பிடித்தல், மது அருந்துதலை தவிர்த்தல், கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தாமல் இருப்பது, தினமும் ஆட்டுப் பாலை காய்ச்சாமல் ஒரு டம்ளர் அருந்துவது, பச்சை காய்கறிகள் அதிகம் சாப்பிடுவது ஆகியவற்றின் மூலம் புற்று நோய்க்கு குட்பை சொல்லலாம்.

இன்று(பிப்ரவரி 4) உலக புற்றுநோய் தினம்.

-கிருஷ்ணா கணேஷ்

Next Story