ஆபத்தான நிலையில் உள்ள குளத்தை சீரமைக்க கோரிக்கை
புழுதிவாக்கம் தகன மயானத்தில் ஆபத்தான நிலையில் உள்ள குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆலந்தூர்,
சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலத்துக்கு உட்பட்ட புழுதிவாக்கத்தில் எரிவாயு தகன மயானம் உள்ளது. இந்த மயானத்தின் உள்ளே பழமையான குளம் அமைந்துள்ளது. மயானத்தின் நுழைவு வாயிலில் இருந்து தகன மேடை வரை உள்ள இந்த குளம் சீரமைக்கப்படாமல் உள்ளது.
குளத்தை சுற்றிலும் தடுப்பு சுவர் இல்லாமல் தரைமட்டத்துக்கு அமைந்து உள்ளது. குளத்தின் உள்ளே தண்ணீர் இருப்பதே தெரியாத அளவுக்கு ஆகாய தாமரைகள் மற்றும் செடிகள் வளர்ந்து உள்ளன.
இதனால் இறந்தவர்களின் உடல்களை மயானத்துக்கு கொண்டு வருபவர்கள், கும்பலாக நடந்து வரும்போது அது குளம் என்று தெரியாமல் நிலத்தில்தான் புதர்மண்டி கிடப்பதாக நினைத்து அதில் இறங்கி குளத்துக்குள் தவறி விழுந்து விடுகின்றனர்.
அடிக்கடி இதுபோல் சம்பவம் நடைபெறுவதால் அதை தவிர்க்க மாநகராட்சி சார்பில், குளத்தின் ஒரு பகுதியில் கயிற்றால் தடுப்பு ஏற்படுத்தி, “இந்த குளம் மிகவும் ஆழமானது. குளத்தில் இறங்குவதை தவீர்ப்பீர்” என்ற வாசகம் அடங்கிய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்த குளத்தை முழுமையாக தூர்வாரி கரை பகுதியில் தடுப்பு சுவர்கள் ஏற்படுத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
எனவே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, உயிர் பலி ஏற்படுவதற்கு முன்பாக ஆபத்தான நிலையில் உள்ள இந்த குளத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Related Tags :
Next Story