குளத்தில் விஷம் கலப்பு மீன்கள் செத்து மிதந்தன


குளத்தில் விஷம் கலப்பு மீன்கள் செத்து மிதந்தன
x
தினத்தந்தி 5 Feb 2018 4:30 AM IST (Updated: 5 Feb 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே குளத்தில் மர்ம நபர்கள் விஷம் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் அருகே அண்ணாமண்டபம் மெயின்ரோட்டில் பிள்ளைத்திருவாசல் குளம் உள்ளது. இந்த குளத்தில் அப்பகுதியில் செயல்பட்டு வரும் தென்னாடுடைய சிவனடியார் வெற்றி நிச்சயம் ஒற்றுமை நல சங்கத்தினர் மீன்களை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் மர்ம நபர்கள் இந்த குளத்தில் குருடாயில், பெயிண்ட் உள்ளிட்ட விஷப்பொருட்களை கலந்துள்ளனர். இதனால் குளத்தின் தண்ணீரில் நிறம் மாறி காணப்படுகிறது. விஷம் கலந்துள்ளதால் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன. மேலும், தண்ணீர் மாசுபட்டுள்ளதோடு துர்நாற்றமும் வீசிவருகிறது.

போலீசில் புகார்

இதுப்பற்றி அந்த சங்கத்தின் செயலாளர் பிரபாகர், திட்டச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குளத்தில் மிதக்கும் நச்சுப்பொருட்களை அகற்றி தூய்மை படுத்தி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story