தமிழகத்தில் பினாமி அரசு விரைவில் கவிழும், திருநாவுக்கரசர் பேட்டி
தமிழகத்தில் நடைபெற்று வரும் பினாமி அரசு விரைவில் கவிழும் என்று ராமநாதபுரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திரு நாவுக்கரசர் பேசினார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:- இந்தியாவின் மிக பழமையான கட்சிகள் காங்கிரசும், முஸ்லிம் லீக் கட்சியும் தான். நமது மாநிலத்தை சேர்ந்த காதர்முகைதீன் அந்த கட்சிக்கு தேசிய தலைவராக இருப்பது நமக்கெல்லாம் பெருமை. எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு வந்த நான் 6 முறை அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் முஸ்லிம்களின் வாக்குகளால் வெற்றி பெற்றேன்.
மத்திய அரசின் முத்தலாக் சட்டம் ஷரியத் சட்டத்திற்கு எதிரானது. விவாகரத்து இல்லாத மதமே உலகில் கிடையாது. இறைவனால் சொல்லப்பட்ட ஷரியத் சட்டத்தில் பல விதிமுறைகள் வரம்புகள் உள்ளன. யாரும் எளிதில் தலாக் கூறமுடியாது. இதில் மத்திய அரசு தலையிட அவசியமே இல்லை. ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை மோடி திணித்து வருகிறார். சிவில் சட்ட த்தில் வரக்கூடிய விவாகரத்தை 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க கூடிய கிரிமினல் சட்டமாக மாற்றுவதை ஏற்க முடியாது. அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்தியாவையே மோடி விற்று வருகிறார்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் பினாமி அரசு விரைவில் கவிழும். ராஜஸ்தான் இடைத்தேர்தல் வெற்றி காங்கிரசின் தொடக்கமாகும். விரைவில் ராகுல் தலைமையிலான மத சார்பற்ற அரசு மத்தியில் அமையும். இந்தியாவில் வாழும் சிறுபான்மையினர் மதிக்கப்பட வேண்டும். அவர்களை பிரித்து பார்க்கக்கூடாது. அவர்களை தனிமைப்படுத்துவதோ, வேற்றுமைப்படுத்துவதோ காட்டுமிராண்டித்தனமானது.
அரசியல் சட்டத்தின்படி அவர்களுக்கு சம உரிமை உள்ளது. நம்மை போலவே சிறுபான்மையினர் இந்தியாவை நேசித்து வரு கின்றனர். மக்கள் மத்தியில் பா.ஜ.க. வேற்றுமையையும், பிளவையும் உருவாக்கி ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மொழி, ஒரே க ட்சி, ஒரே ஆட்சி என பா.ஜ.க. கூறுவது அபத்தமானது. பட்ஜெட்டில் வெறும் வெற்று அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டுள் ளனர். பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதோடு தமிழக சட்டமன்ற தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story