மேலூர் அருகே பரிதாபம்: பயிர் கருகியதால் இறந்த விவசாயியின் மகனும் சாவு


மேலூர் அருகே பரிதாபம்: பயிர் கருகியதால் இறந்த விவசாயியின் மகனும் சாவு
x
தினத்தந்தி 5 Feb 2018 5:15 AM IST (Updated: 5 Feb 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

மதுரை தும்பைப்பட்டியை அடுத்துள்ள அட்டபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நம்பியார் விவசாயி.

மேலூர்,

மதுரை மேலூர் அருகே தும்பைப்பட்டியை அடுத்துள்ள அட்டபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நம்பியார் (வயது 65). விவசாயி. இவருடைய மகன் நல்லுச்சாமி (38). விவசாயி நம்பியார் தனது நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தாராம். போதிய தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகியதைப் பார்த்த நம்பியாரும், அவரின் குடும்பத்தினரும் சோகத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நம்பியார் இறந்தார். அவரது துக்க நிகழ்ச்சிக்காக நல்லுச்சாமி குடும்பத்தினருடன் திருப்புவனத்திற்கு சென்றார். அங்கு தந்தையின் இறப்பு பற்றி சோகத்தில் இருந்த நல்லுச்சாமி திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இவருக்கு பூமாலை என்ற மனைவியும் யுவராஜ் (10) என்ற மகன், ஆதிரை (6) என்ற மகள் உள்ளனர். பயிர் கருகிய மன வேதனையில் இருந்த தந்தையும், மகனும் அடுத்தடுத்து பலியான சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story