தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் சம்பந்தி வீட்டில் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து திருட முயற்சி
தாராபுரத்தில் உள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் சம்பந்தி வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே புகுந்து திருட முயன்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஞானமுத்து காலனியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் சம்பந்தி ஆவார். தொழில் அதிபரான ராமசாமியின் மனைவி ஜோதி. இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகள் கிருத்திகாவை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திருமணம் செய்துள்ளார்.
தற்போது ராமசாமி தனது குடும்பத்தினருடன் சென்னையில் குடியிருந்து வருகிறார். மாதத்திற்கு ஒருமுறை தாராபுரத்தில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். தற்போது தாராபுரத்தில் உள்ள வீட்டை, அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவர் பராமரித்து பாதுகாத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை ராமசாமியின் வீட்டு கதவு திறந்து கிடப்பதாக பால்ராஜுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து பால்ராஜ், ராமசாமியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் அருகே இருந்த ஜன்னல் கண்ணாடியை நேற்று முன்தினம் இரவில் மர்ம ஆசாமிகள் உடைத்து, அதன் வழியாக கதவை திறந்து வீட்டின் உள்ளே சென்றிருப்பது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
ராமசாமியின் குடும்பத்தினர் இந்த வீட்டில் வசிக்காததால், வீட்டில் ஒரு சில வீட்டு உபயோகப்பொருட்களை தவிர பணமோ, நகையோ வைக்கவில்லை என்பதும், திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளதும் தெரியவந்தது. இது குறித்து ராமசாமிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் யார் என்பது குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story