கீழ்பவானி வாய்க்காலில் புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காவிட்டால் முற்றுகை போராட்டம் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்
கீழ்பவானி வாய்க்காலில் புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு,
கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் காசியண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரத்தினசாமி, கூட்டமைப்பு செயலாளர் வடிவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துளசிமணி, தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
கீழ்பவானி ஒற்றை எண் மதகுகளின் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே பவானிசாகர் அணையில் உள்ள 6 டி.எம்.சி. தண்ணீரையும், நீர்மின் அணைகளில் உள்ள தண்ணீரை பெற்றும் கீழ்பவானி வாய்க்காலில் புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்.
இது தொடர்பாக மாநில அரசு அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் வருகிற 12–ந் தேதி ஈரோடு பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.
பவானிசாகர் அணையில் நீர் பங்கீடு முறை மற்றும் காவிரி இறுதி தீர்ப்புக்கு எதிராக ஓடைத்துறை குளத்துக்கு தண்ணீர் திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story