பெருந்துறை அருகே அரசு பஸ்சின் மேற்கூரையில் பதித்த தார்பாய் பறந்தது


பெருந்துறை அருகே அரசு பஸ்சின் மேற்கூரையில் பதித்த தார்பாய் பறந்தது
x
தினத்தந்தி 5 Feb 2018 3:15 AM IST (Updated: 5 Feb 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் இருந்து நேற்று முன்தினம் ஒரு அரசு பஸ் புறப்பட்டு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது

ஈரோடு

ஊட்டியில் இருந்து நேற்று முன்தினம் ஒரு அரசு பஸ் புறப்பட்டு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் பெருந்துறை அருகே உள்ள சரளை என்ற இடத்தில் வந்தபோது மழைநீர் உள்ளே இறங்காமல் இருப்பதற்காக பஸ்சின் மேற்கூரையில் பதித்திருந்த தார்பாய் திடீரென்று கழன்றது. பின்னர் காற்றில் வேகத்தில் பறந்து போய் ரோட்டில் விழுந்தது.

அப்போது அந்த பகுதியில் தி.மு.க. மண்டல மாநாட்டு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் இதை பார்த்தார்கள். உடனே சத்தம் போட்டு பஸ்சை நிறுத்தினார்கள். பின்னர் டிரைவரிடம் இதுகுறித்து கூறினார்கள். அதைத்தொடர்ந்து டிரைவர், பயணிகள் உதவியுடன் ரோட்டில் விழுந்து கிடந்த தார்பாயை எடுத்து பஸ்சின் மேல்பகுதியில் சுருட்டி வைத்தார். இந்த சம்பவத்தின் போது அந்த வழியாக எந்த வாகனமும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Next Story