ஜூகு கடலில் குதித்து எம்.பி.ஏ. பட்டதாரி தற்கொலை
ஜூகு கடலில் குதித்து எம்.பி.ஏ. பட்டதாரி தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை,
ஜூகு கடலில் குதித்து எம்.பி.ஏ. பட்டதாரி தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர் உடல் மீட்பு
மும்பை ஜூகு கடற்கரையில் சம்பவத்தன்று இரவு வாலிபர் ஒருவரின் உடல் கரை ஒதுங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாந்தாகுருஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கடலில் குதித்து தற்கொலை
விசாரணையில், பிணமாக மீட்கப்பட்டவர் காட்கோபர் பகுதியில் வசித்து வந்த அஜித் (வயது29) என்பது தெரியவந்தது. எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வாலிபர் அஜித்தின் பெற்றோர் புனேயில் வசித்து வருகின்றனர். இவர் மும்பையில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலுடன் இருந்து வந்துள்ளார். மனஉளைச்சல் காரணமாக அஜித் ஜூகு பகுதியில் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story