விமான நிறுவனத்தில் ஆபரேட்டர் வேலை
இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், இந்திய ராணுவத்திற்குத் தேவையான விமானங்கள் மற்றும் விமான உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனமாகும். பொதுத்துறை நிறுவனமான இந்த நிறுவனத்தில் தற்போது ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மொத்தம் 131 பணியிடங்கள் உள்ளன. இட ஒதுக்கீடு அடிப்படையில் பொது -68, எஸ்.சி.-26, எஸ்.டி. -2, ஓ.பி.சி.-35 இடங்கள் உள்ளன. இவை காண்டிராக்ட் அடிப்படையிலான பணிகளாகும். மெஷினிஸ்ட், டர்னர், கிரைண்டர், பிட்டர், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ருமென்டேசன் மெக்கானிக் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன.
28 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 33 வயது வரையும், ஓ.பி.சி. பிரிவினர் 31 வயதுடையவராக இருந்தாலும் விண்ணப்பிக்க முடியும்.
பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. படித்து, என்.ஏ.சி., என்.சி.டி.வி.டி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி, இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 14-2-2018-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.halindia.com என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story