ஸ்டேட் வங்கியில் 407 சிறப்பு அதிகாரி பணிகள்


ஸ்டேட் வங்கியில் 407 சிறப்பு அதிகாரி பணிகள்
x
தினத்தந்தி 5 Feb 2018 12:52 PM IST (Updated: 5 Feb 2018 12:52 PM IST)
t-max-icont-min-icon

ஸ்டேட் வங்கியில் 407 சிறப்பு அதிகாரி பணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் வங்கி. இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் சேவையாற்றும் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி என்ற பெருமை பெற்றது. இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான கிளார்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டிருந்தது. குறிப்பிட்ட பிரிவுகளில் சிறப்பு அதிகாரி பணிக்கும் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.

தற்போது மேலும் பல்வேறு பிரிவுகளில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு 407 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரிலேசன்ஷிப் மேனேஜர் பிரிவில் 202 இடங்களும், கஸ்டமர் ரிலேசன்ஷிப் எக்சிகியூட்டிவ் பிரிவில் 55 இடங்களும், ஆக்குயிசிசன் ரிலேசன்சிப் மேனேஜர் பிரிவில் 80 இடங்களும், இன்வெஸ்ட்மென்ட் கவுன்சலர் பிரிவில் 33 இடங்களும் உள்ளன. புராஜெக்ட் டெவலப்மென்ட் மேனேஜர், பிசினஸ் டெவலப்மென்ட், சென்ட்ரல் ஆபரேசன் டீம் சப்போர்ட், ஜோனல் ஹெட் உள்ளிட்ட வேறு சில பிரிவுகளிலும் பணியிடங்கள் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களைப் பார்க்கலாம்...

வயது வரம்பு:

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம்.

கல்வித்தகுதி:

பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ஏராளமான பணிகள் உள்ளன. பல பணிகளுக்கு பட்டப்படிப்புடன், முதுநிலை பட்டப்படிப்பும், சில பணிகளுக்கு முதுநிலை படிப்புடன், டிப்ளமோ படிப்பும் தகுதியாக கேட்கப்பட்டுள்ளது. வங்கிப்பணி, வர்த்தகம், நிதி, புள்ளியியல், நிர்வாகவியல், கணிதவியல் உள்ளிட்ட துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்புகள் அதிகமுள்ளது. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

கட்டணம்.

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 15-2-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.sbi.co.in.careers என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

Next Story