வேகம் பிடிக்கும் ‘நீட்’ பயிற்சி
தமிழகத்தில் நீட் தேர்வு பயிற்சிகள் வேகம் பிடித்துள்ளன.
மருத்துவ பட்டப்படிப்பில் சேர்வதற்கு ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு, தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்தது. இதையடுத்து தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி வழங்குவதை முக்கியப் பணியாகக் கருதி களத்தில் இறங்கின. தனியார் போட்டித் தேர்வு பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து அவர்கள் தங்கள் மாணவர்களை தயார்படுத்துகிறார்கள்.
இதுபோன்ற சிறப்புப் பயிற்சிகள் ஏதும் இல்லாததால், அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள சிரமப்படுவதாக கருத்து வலுத்தது. இதையடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இலவச ‘நீட்’ பயிற்சி வழங்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. முதல்கட்டமாக 100 மையங்களில் பயிற்சி தொடங்கப்பட்டது, சில நாட்களுக்கு முன்பு மேலும் 312 மையங்களில் பயிற்சி தொடங்கப்பட்டிருக்கிறது. விருப்பமான மாணவர்கள் பள்ளி அடையாள அட்டை மற்றும் முகவரிக்கான அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைக் காட்டி பயிற்சியில் சேரலாம்.
தேர்வு மாதமான மார்ச் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், நீட் தேர்வுக்கும் சேர்த்து பயிற்சிகள் வேகம் பிடித்துள்ளன. மாதிரி தேர்வுகளும் நடத்த உள்ளனர். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வை எதிர்கொள்ள பயிற்சிகள் உதவட்டும்!
Related Tags :
Next Story